தமிழக சட்டமன்ற தேர்தல் தபால் தேர்தல் முறை – தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் மூலமாக வாக்களிக்கும் முறை கட்டாயமில்லை எனவும் அவர்கள் தங்களது விருப்பத்தின் படி வாக்களிக்கலாம் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் போன்றோர் தபால் முறையில் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்கினை செலுத்த 12டி என்ற விண்ணப்பபடிவம் தேர்தல் ஆணையத்தில் தயாரிக்கப்படுகின்றன. தபால் வாக்களிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும். வாக்காளர்கள் வழங்கிய விவரங்கள் அனைத்தும் வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். பின்னர் அவர்களுக்கான தேதி மற்றும் நேரத்தை வாக்காளரின் செல்லிடப்பேசி அல்லது தபால் மூலமாக தெரிவிக்கப்படும்.
தபால் முறை வாக்களிப்பு மூன்று கட்டங்களை கொண்டதாக இருக்கும் வாக்குபதிவு அதிகாரிகளால் சான்று அளிக்கப்படும் படிவம் 13ஏ ஆகும். இதனுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குசீட்டை படிவம் 13பி அதனை உள்ளே வைக்க வேண்டும். இதனை ஒட்டி ஒரு பெரிய கடித உரையான படிவம் 13சி வைத்து அதை ஒட்டி தேர்தல் அலுவலர் குழுவிடம் அளிக்க வேண்டும்.
வாக்காளர்கள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வாக்களிக்க வேண்டும் அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். தபால் வாக்களிக்கு முறையானது முழு விடியோவாக தயார் செய்ய வேண்டும். அவ்வாறு வாக்களிக்கும் போது ரகசிய வாக்களிக்கும் முறையை கடைபிடிக்க வேண்டும். வாக்களிக்கும் போது வாக்காளர்கள் வீட்டில் இல்லையென்றால் இரண்டாவது முறையும் அவர்களது வீட்டிற்கு செல்ல வேண்டும்.
தபால் வாக்களிப்பு முறையை வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கிய தினத்தில் இருந்து 5 வேலைநாட்களுக்குள் இதற்கான படிவத்தை தேர்தல் அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். 12டி படிவத்தை தமிழக தேர்தல் துறையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை