புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூட கல்வித்துறை மீண்டும் ஆணை!!
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில், சில பள்ளிகள் நேரடி வகுப்புகளை நடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அனைத்து பள்ளிகளையும் மூட வேண்டும் என மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் விளைவாக புதுச்சேரியில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பின்னர் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், புதுச்சேரியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் புதுச்சேரியில் 1 முதல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. மே 31ம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
அரசின் உத்தரவினை மீறி பல்வேறு பள்ளிகள் மாணவர்களுக்கு தொடர்ந்து நேரடி வகுப்புகளை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் குவிந்தன. எனவே புதுச்சேரி அரசு மீண்டும் உத்தரவினை பிறப்பித்து உள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நிறுத்தம் செய்யப்பட்டு, கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மூட கல்வித்துறை மீண்டும் ஆணை!!
Reviewed by Rajarajan
on
24.3.21
Rating:
கருத்துகள் இல்லை