கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூட பஞ்சாப் மாநில கல்வித்துறை அறிவிப்பு
பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் 8 மாவட்டங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி லூதியானா, பாட்டியாலா, மொகாலி, உள்பட 8 மாவட்டங்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. கொரோனா தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டார். இருந்த போதிலும் பள்ளிகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தேர்வுகள் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள், மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் கடுமையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் மார்ச் 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளையும் மூட பஞ்சாப் மாநில கல்வித்துறை அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
14.3.21
Rating:
கருத்துகள் இல்லை