9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை
தமிழகத்தில் தற்போது நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ளும் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தின. பின்னர் நோய்த்தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கிய மத்திய அமைச்சகம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகளை திறக்க தொடங்கின. தமிழகத்திலும் தற்போது வரை 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. சில பள்ளிகளில் ஆசிரியர்களையும் கொரோனா தாக்கியது. இதனையடுத்து அந்த பள்ளிக்ள் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனால் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனவே விரைவில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பெற்றோர்கள் கோரிக்கை
Reviewed by Rajarajan
on
15.3.21
Rating:
கருத்துகள் இல்லை