இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் - மத்திய அரசு எச்சரிக்கை
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருகிறது. நேற்று ஒருநாள் மட்டும் இந்தியாவில் 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மாநிலங்களில் அதிகமாக கொரோனா தாக்கம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் தான். கொரோனா குறைந்து வந்த நேரத்தில் மக்கள் சரியாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது தான் இதற்கு காரணம்.
இந்த பாதிப்பை கட்டுப்படுத்த தினசரி 50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். நேற்று ஒருநாள் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 172 பேர் ஆகும். கடந்த மாதம் வரை 100க்குள் இருந்த நிலையில் தற்போது அதிகமாகியுள்ளது. எனவே இன்னும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்ற வேண்டும்”, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் - மத்திய அரசு எச்சரிக்கை
Reviewed by Rajarajan
on
18.3.21
Rating:
கருத்துகள் இல்லை