தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு வயது 61 ஆக அதிகரிப்பு
தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அளிப்பதுடன் அவர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுவதாக அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தெலங்கானாவில் 5 ஆண்டுக்கு ஒருமுறை அரசு ஊழியர் ஊதியதிருத்த ஆணையத்தின் பரிந்துரைப்படி புதிய ஊதியம் அமல்படுத்தப்படுகிறது.
அதன் படி நிதியாண்டில் ஏப்ரல் முதல் தெலங்கானாவில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 30 சதவீத ஊதியஉயர்வு அமல்படுத்தப்பட்டது.
அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58-ல் இருந்து 61 ஆக உயர்த்தப்படுகிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெறும் வயது75-ல் இருந்து 70 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பு 180 நாட்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு சந்திரசேகர ராவ் அறிவித்தார்.
தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஓய்வு வயது 61 ஆக அதிகரிப்பு
Reviewed by Rajarajan
on
23.3.21
Rating:
கருத்துகள் இல்லை