தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் மூட வலியுறுத்தல் – 65 மாணவர்களுக்கு கொரோனா
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் மூட வலியுறுத்தல் – 65 மாணவர்களுக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்து உள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகளை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தற்போது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளில் கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. அங்குள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவி மற்றும் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்த மொத்த பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் 945 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவன மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தஞ்சாவுர் மாவட்டத்தில் தற்போது வரை 5 பள்ளிகளில் கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளியில் 56 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களின் பெற்றோர்களும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் இன்று மற்றொரு பள்ளியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மீண்டும் மூடி ஆன்லைன் வகுப்புகளை தொடர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் மூட வலியுறுத்தல் – 65 மாணவர்களுக்கு கொரோனா
Reviewed by Rajarajan
on
18.3.21
Rating:
கருத்துகள் இல்லை