தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களிடையே கொரோனா பரவல்  மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் அவர்களுக்கான வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 பள்ளிகளில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 நாட்களாக கொரோனா பரவலின் 2வது அலை வேகமெடுக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பயிற்சி வகுப்புகளும் தொடங்கி உள்ளதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
 
        Reviewed by Rajarajan
        on 
        
18.3.21
 
        Rating: 


கருத்துகள் இல்லை