மார்ச் 17 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் சேவை தொடக்கம்
தமிழகம் முழுவதும் முன்பதிவு இல்லாத ரயில் சேவை மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும், அதற்கான ரயில் டிக்கெட்டுகள் இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து போக்குவரத்து குறிப்பாக பேருந்து, ரயில் சேவையும் நிறுத்தப்பட்டன. படிப்படியாக பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
ஆனால் ரயில் பயணம் செய்பவர்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். முன்பதிவு இல்லாத ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் தற்போது தெற்கு ரயில்வே மார்ச் மாதம் 17 ஆம் தேதி முதல் முன்பதிவு இல்லாமல் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்களில் பட்டியல் வெளியிட்டுள்ளது. அவை, ரயில் எண் 06867 / 06868 – விழுப்புரம் to மதுரை, ரயில் எண் 06087 / 06088 – அரக்கோணம் – சேலம், ரயில் எண் 06115 / 06116 – எழும்பூர் to புதுச்சேரி to சென்னை எழுப்பூர் சிறப்பு ரயில், ரயில் எண் 06327 – 06328 புனலூர் to குருவாயூர் சிறப்பு ரயில்.
இந்த ரயில்களில் பயணம் செய்ய இன்று (மார்ச் 15) முதல் டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. மேலும் இதற்கான டிக்கெட்டுகளை ரயில் இயங்கப்படும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
கருத்துகள் இல்லை