பள்ளி மற்றும் கல்லூரிகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் தயார் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் தயார் செய்ய வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. பல அரசியல் கட்சிகளும் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகின்றனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
வாக்குப்பதிவு நடைபெறும் நாளிற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக வாக்குச்சாவடிகள் அமைக்கும் பணி, பொது மக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்துதல், மாற்றுத்திறனாளிகளுக்கான பாதைகள் அமைத்தல் மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.
தேர்தல் பணிகளுக்கான அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. ஆனால் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வருவதால் இன்னும் அவை மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரவில்லை. பள்ளிகளை வாக்குச்சாவடிகளாக ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதிக்குள் மாற்றப்பட வேண்டும். எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களை தயார் நிலையில் வைத்து, பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளை ஏப்ரல் 1 ஆம் தேதிக்குள் தயார் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
18.3.21
Rating:
கருத்துகள் இல்லை