தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கையுறை வழங்கப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகள்:
தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் அதிகாரி பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிவிப்பின் படி சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தமிழகத்தில் நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
TN Job “FB
Group” Join Now
பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் வரலாற்றில் மிக முக்கிய தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் இதுவே ஆகும். இந்நிலையில் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் மார்ச் மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் மாதம் 19 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் முடிவடைகிறது.
மேலும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வேட்புமனு தாக்கல் செய்ய இயலாது. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது அவருடன் இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கூடுதலாக மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். அதில் 50% வாக்குச் சாவடிகள் வெப் கேமரா மூலமாக கண்காணிக்கப்படுகின்றன.
தேர்தல் முடிவடைந்த பின்னர் வாக்குகள் எண்ணிக்கை 76 மையங்களில் நடைபெறும். மேலும் வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கையுறை வழங்கப்படுகிறது”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!
Reviewed by Rajarajan
on
9.3.21
Rating:
கருத்துகள் இல்லை