Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

TNPSC பணியிடங்களில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!



டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20% இடஒதுக்கீடு 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்றவருக்கு மட்டுமே  வழங்க வேண்டும் என சென்னை கிளை ஐகோர்ட் தெரிவித்துள்ளது .  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் இதுகுறித்து மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பயின்று 11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆங்கில வழியில் பயின்றவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி பணியிடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNPSC பணியிடங்களில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!! TNPSC பணியிடங்களில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு!! Reviewed by Rajarajan on 22.3.21 Rating: 5

கருத்துகள் இல்லை