அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பண பலன் வழங்கியது புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஆறு மாத நிலுவை ஊதியமும், ஓய்வூதியதாரர்களுக்குக் கடந்த 14 மாத நிலுவை ஓய்வூதியமும் தர ரூ.27.85 கோடியை விடுவிக்க ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள 35 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் என 450 பேர் பணிபுரிகின்றனர். ஓய்வூதியர்கள் 350 பேர் உள்ளனர். மொத்தம் 800 குடும்பத்தினருக்கு ஊதியம், ஓய்வூதியம் கடந்த 14 மாதங்களாகத் தரப்படவில்லை. இது தொடர்பான கோப்பு உயரதிகாரிகளால் பல முறை திருப்பி அனுப்பப்பட்டது.
இன்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய உத்தரவிட்டார், "அதன் படி ஜனவரி 2020 ஆண்டு முதல் பிப்ரவரி 2021 வரை 14 மாதங்களுக்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள 35 அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியமும், கடந்த செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை ஆறு மாதங்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு ஊதியமும் தரப்படும். இதற்காக ரூ. 27.85 கோடிக்கான பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின் செலவிடத் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பண பலன் வழங்கியது புதுச்சேரி அரசு
Reviewed by Rajarajan
on
17.3.21
Rating:
கருத்துகள் இல்லை