விரைவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் பற்றிய அறிவிப்பு
விரைவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆல்பாஸ் பற்றிய அறிவிப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று காரணமாக அறிவித்த ஊரடங்கினால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டில் 12ம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.
நடப்பு ஆண்டில் மாணவர்களுக்கான பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்க தொடங்கப்பட்டது. 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் மாணவர்கள் பாதுகாப்பு கருதி 12ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு விட்டது.
மேலும், தமிழகத்தில் முன்னதாவே 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவர்க்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறும் திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் நடப்பு ஆண்டில் 9 முதல் 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் அவர்கள் தேனி மாவட்ட சீலையம்பட்டியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போது 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரயும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக ராய்விப்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.
கருத்துகள் இல்லை