தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்ட அரசாணை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்ட அரசாணை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு.மத்திய அரசு துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது. அதைப்போன்றே மாநில அரசு ஊழியர்களின் ஓய்வு வயதும் உயர்த்தப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரப்பட்டு வந்தது. தமிழக அரசும் ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 இல் இருந்து 59 ஆக உயர்த்தியது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பில் 110வது விதியின் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதன் விளைவாக இளைஞர்களின் அரசுப்பணி கனவு பாதிக்கப்படும் என கூறப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக அதிகரிக்கப்பட்டது தொடர்பாக அரசு பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு ஓய்வூதிய பலன்கள் மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்ட அரசாணை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!!
Reviewed by Rajarajan
on
20.3.21
Rating:
கருத்துகள் இல்லை