12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. ஆனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. மாணவர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து 2வது முறையாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகி உள்ளதால் கல்வித்தரம் பாதிக்கப்படும் என கல்வியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளன.
தேர்தல் காரணமாக பொதுத்தேர்வு தேதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னதாகவே கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் கிடுகிடுவென உயரத் தொடங்கி உள்ளது.
தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது நாட்கள் செல்ல செல்ல அதிகரிக்கும் என்பதால் பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர். அடுத்த ஏப்ரல் மாத இறுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட அல்லது ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்
Reviewed by Rajarajan
on
23.3.21
Rating:
கருத்துகள் இல்லை