தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை – CEO அறிவிப்பு!!!
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதால் நாகப்பட்டினம் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
முதன்மை கல்வி அலுவலரின் அறிக்கை:
2021ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடக்க இருக்கிறது. தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள உள்ளதால் நாகப்பட்டினம் மாவட்ட பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து, அட்டவணையை வெளியிட்டுள்ளார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்.
அவர் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கை பின்வருமாறு, நாகப்பட்டினம் வருவாய் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021க்கான தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மார்ச் 18, 26 & ஏப்ரல் 3 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மேற்குறிப்பிட்ட நாட்கள் பார்வையில் குறிப்பிட்டுள்ள செயல்முறைகளின்படி, உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்பட்டுள்ளது என்று அனைத்து சரர்நிலை அலுவலருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் / பணியாளர்களுக்குரிய ஆணையை சார்ந்த நபர்களிடம் வழங்கப்பட வேண்டும். ஆணை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்திட வேண்டும்.
மருத்துவ காரணங்களின் அடிப்படியில் தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோருபவர்கள் இன்று (18.03.2021) பயிற்சி வகுப்புகள் நடைபெறும் மையத்திற்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவக் குழுவின் முன் தகுந்த ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு சார்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு தெரிவித்திட சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த அறிவிப்பானது நாகப்பட்டின மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை