பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண் வழங்க புதிய நடைமுறை பின்பற்ற முடிவு
கரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
பிளஸ் 2 தவிர்த்து இதர வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, வீட்டுப்பள்ளி திட்டத்தின்கீழ் கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண்கள் கணக்கீட்டில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்தாண்டு 9-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை வழங்குவதற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி கடந்த ஆண்டு பெற்ற 9-ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவின்படி பெற்ற அதே மதிப்பெண்களை மீண்டும் 10-ம் வகுப்புக்கும் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள்குறித்து பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண் வழங்க புதிய நடைமுறை பின்பற்ற முடிவு
Reviewed by Rajarajan
on
31.3.21
Rating:
கருத்துகள் இல்லை