ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படுமா? பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்!
கொரோனா காரணமாக 9, 10 மற்றும் 11 ஆம் ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12 வகுப்புகளுக்கு மட்டும் மே 3 ஆம் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொரோனா பரவலும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தகவல் வெளியானது.
இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்றும் ஏப்.1ஆம் தேதிக்கு பிறகும் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்படுமா? பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்!
Reviewed by Rajarajan
on
16.3.21
Rating:
கருத்துகள் இல்லை