அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. அட்மிஷன் ஜூன், 3 முதல்...!
தமிழகத்தில், அரசு தொடக்க பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், ஜூன், 3 முதல், எல்.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை, துவங்க உள்ளது.அரசு பள்ளிகளில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., எனும் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. ஆனால், அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளில், இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அரசாணைஅரசு பள்ளிகளில் கே.ஜி., வகுப்புகள் இல்லாததால், பெற்றோர், தனியார் பள்ளிகளில், அதிக கட்டணம் செலுத்தி, குழந்தைகளை சேர்க்க வேண்டியுள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, அரசு பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகளை துவங்க, பள்ளி கல்விதுறை சார்பில், 2018, டிசம்பரில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலை பள்ளிகளிலும், கே.ஜி., வகுப்புகள் துவங்கவும், குறிப்பாக, அங்கன்வாடிகளைஒட்டியுள்ள பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, 2,381 பள்ளிகளும், அங்கன்வாடிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், 2018ல், புதிய மாணவர்களை சேர்க்க முடியவில்லை.இந்த ஆண்டு முதல், மாணவர்களை சேர்த்து,எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அறிவுறுத்தல்கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 3ல்,பள்ளிகள் திறக்கப்பட்டதும், எல்.கே.ஜி., சேர்க்கையை தீவிரப்படுத்த, தொடக்க கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அதிகாரிகளை அறிவுறுத்திஉள்ளது.
அதேபோல், மாவட்ட வாரியாக துவங்கப்பட்ட, 32 மாதிரி மேல்நிலை பள்ளிகளிலும், எல்.கே.ஜி., வகுப்புகளில், மாணவர்களை சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி. அட்மிஷன் ஜூன், 3 முதல்...!
Reviewed by Rajarajan
on
23.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
23.5.19
Rating:


கருத்துகள் இல்லை