Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு





அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு மாணவர்களின் வருகை பதிவேடு EMIS மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வெற்றி பெற்றது. அதே தளத்தில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு தலைமையாசிரியர் கண்காணிப்பின் கீழ் செயல்பட்டு வந்தது. 


இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை முழுமையாக கண்காணிக்க பயோமெட்ரிக் முறை கொண்டு வந்துள்ளது. இது ஆதார அடிப்படையாக இயங்கக்கூடிய வருகைப் பதிவேடு முறையாகும். இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளியில் முழுமையாக செயல்படுவதை கண்காணிக்க கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


பல ஆண்டுகளாகவே சில பள்ளிகளில் ஆசிரியர்கள் காலம் தாழ்த்தி வருவதும் சொந்த வேலையாக பலமுறை பள்ளியை விட்டு வெளியே வருவதுமாக இருப்பதன் காரணத்தினால் பள்ளிக்கல்வித்துறை இதனை கட்டுப்படுத்த அரசு பயோமெட்ரிக் முறையை வரும் கல்வியாண்டில் ஜூலை 3ஆம் தேதி முதல் கொண்டுவர உள்ளது.



இதையடுத்து, அனைத்து அரசுப் பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி மே மாதம் தொடங்கியது. தற்போது உயர்நிலைப் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில்  பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி முடிந்துள்ளன.  இதன் மூலம் ஆசிரியர்கள் என்னுடைய பணி முழுமையாக கண்காணிக்கப்படும் என நம்பப்படுகிறது. இந்த முறையானது அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட உள்ளது. மிக விரைவில் தொடக்கக்கல்வி துறையிலுள்ள ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு விரைவில் செயல்படும் என தெரிகிறது.

பயோ மெட்ரிக் பயன்பாடு ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது, செயல்பட வேண்டும் என்றும், 3ம் தேதி முதல் ஆசிரியர்கள் கண்டிப்பாக பயோ மெட்ரிக் கருவியில் விரல்ரேகை பதிவு செய்து வருகையை உறுதி செய்ய வேண்டும்.பயோ மெட்ரிக் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மூன்றாம் தேதி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு Reviewed by Rajarajan on 31.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை