அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குனர்
புதிய கல்வி ஆண்டு துவங்கும் நிலையில், பள்ளிக் கல்வி இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் மாற்றப்பட உள்ளனர்.தற்போது, தேர்வு துறை இயக்குனராக உள்ள வசுந்தரா தேவி, மார்ச், 31ல், ஓய்வு பெற வேண்டியிருந்தது. தேர்தல் விதிமுறைகள் மற்றும் பொதுத்தேர்வு பணிகள் காரணமாக, அவருக்கு, மூன்று மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, ஜூன், 30ல், பதவிக் காலம் முடிகிறது.அவரது இடத்தில், புதிய அதிகாரியை நியமிக்க, தமிழக பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அதற்கான பட்டியல், தயார் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இரு இணை இயக்குனர்களுக்கு, இயக்குனர்களாக பதவி உயர்வு வழங்கவும், அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, இரண்டு முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் துணை இயக்குனர்களுக்கு, இணை இயக்குனராக பதவி உயர்வு வழங்கவும், பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகள், ஜூனில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது
அரசு தேர்வு துறைக்கு ஜூனில் புதிய இயக்குனர்
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.5.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
29.5.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை