முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து! மீண்டும் இறுதி தேர்வு முறை அமல்
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது.
இந்த முறையில் 1 முதல் 9 வகுப்பு வரை மூன்று பருவங்களாக பாடபுத்தகங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பிற்கு மட்டும் ஆண்டு இறுதித்தேர்வு அமலாகிறது. இந்த முறையில் மாணவர்கள் ஆண்டு முழுவதும் படித்த பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இதன்மூலம் மாணவர்களுடைய கல்வி தரும் உயரும் என்பதால் மீண்டும் இந்த பழைய ஆண்டு இறுதித் தேர்வு முறையை அமல்படுத்தி உள்ளது.இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும்.காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும் என்று, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து! மீண்டும் இறுதி தேர்வு முறை அமல்
Reviewed by Rajarajan
on
31.5.19
Rating:
கருத்துகள் இல்லை