பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
தமிழ்நாட்டில் ஜூலை 3ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பள்ளி திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி வளாகத்தின் தூய்மை மேற்கொள்ளுதல் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தல் கழிவறை சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை மூன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்த வேண்டும். விலையில்லா புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். EMISல் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பற்றிய தகவல்களையும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
பள்ளி திறப்பதற்கு முன்பு பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்
Reviewed by Rajarajan
on
29.5.19
Rating:

கருத்துகள் இல்லை