கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE 25%) படி தேர்வான மாணவர்களின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சமூகத்தில் நலிந்த பிரிவு, ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அந்த குழந்தைகளுக்கு அந்தந்த மாநில அரசுகளே கல்விச் செலவை செலுத்த வேண்டும்.இந்த இட ஒதுக்கீட்டிற்கு 97 ஆயிரம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு இடம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கட்டாயக்கல்வி சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் தேர்வான மாணவர்களின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
தேர்வான மாணவர்களின் பட்டியல் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். குறைவான விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின்பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்களைப் பெற்ற பள்ளிகளில் ஜுன் 6-ம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE 25%) படி தேர்வான மாணவர்களின் இறுதிப்பட்டியல் மே 31 ம் தேதி வெளியிடப்படும் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்
Reviewed by Rajarajan
on
31.5.19
Rating:
கருத்துகள் இல்லை