மாணவர்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் போன் மற்றும் பைக் கொண்டு வர தடை கல்வித்துறை தலைமையாசிரியர்கள் சுற்றறிக்கை
ஜூலை 3ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்க உள்ளது இந்நிலையில் கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் போன் மற்றும் இருசக்கர வாகனங்களை பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரக் கூடாது.
மாணவர்கள் பள்ளிக்கு காலை 9 15 மணிக்கு முன்பாக வரவேண்டும். லோஹிப் டயட் ஆடைகளை அணிந்து வரக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். குட்டையான அரைக்கைச் சட்டை அணியக்கூடாது. தலைமுடி சீராக வெட்டி இருக்க வேண்டும். சிறிய கருப்பு கலர் பெல்ட் மட்டுமே அணிந்து இருக்க வேண்டும். டாக்கிங் செய்யும்பொழுது சட்டையை வெளியே வரக்கூடாது. மேலும் மேல் உதட்டை தாண்டி மீசை வளர்க்கக்கூடாது.
செயின் அணியக்கூடாது. பிறந்த நாளன்றும் சீருடையில் தான் வரவேண்டும். மாணவர்கள் விடுமுறை எடுக்கும் பொழுது பெற்றோர் மற்றும் ஆசிரியர் அனுமதி பெற்று தான் விடுமுறை எடுக்க வேண்டும் என 11 கட்டளைகளை கூறியுள்ளது. இந்த தகவலை தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையாக கல்வித்துறை அனுப்பி வைத்துள்ளது. கட்டளைகளை மாணவர்கள் தவறாமல் கடைபிடிக்க தலைமையாசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் பள்ளிக்கு ஸ்மார்ட் போன் மற்றும் பைக் கொண்டு வர தடை கல்வித்துறை தலைமையாசிரியர்கள் சுற்றறிக்கை
Reviewed by Rajarajan
on
30.5.19
Rating:
கருத்துகள் இல்லை