கல்விச்சோலை டிவி ஜூன் 3 முதல் முழுநேர ஒளிபரப்பை துவங்குமா?
பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல திட்டங்களை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக கல்விக்கென்று ஒரு தனி தொலைக்காட்சி ஒன்றை நிறுவி உள்ளது. தற்சமயம் தொலைக்காட்சி எனது தனது சோதனை ஒளிபரப்பை ஒளிபரப்பி வருகிறது.
கல்விச்சோலை டிவி என்ற பெயரில் இந்த சோதனை ஒளிபரப்பை மேற்கொண்டு வருகிறது. தனது சேவையை பள்ளி திறக்கும் நாளான ஜூன் மூன்றாம் தேதி முதல் முழு நேரமும் இந்த கல்வி தொலைக்காட்சி செயல்பட இருக்கும் என் தெரிகிறது. இந்த கல்வி தொலைக்காட்சி செயல்படுவதற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது மாடியில் படப்பிடிப்பு தளம் மற்றும் படப்பிடிப்புக்கான அனைத்து கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த கல்விச்சோலை டிவி நிர்வாகம் செய்து வருகிறது.
தற்பொழுது அரசு கேபிள் டிவி எண் 200 கொண்ட சேனலில் சோதனை ஒளிபரப்பு நடந்து வருகிறது. மற்ற தனியார் கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுவனங்களிலும் சோதனை ஒளிபரப்பு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கல்விசோலை டிவி பாடம் சார்த்த நிகழ்ச்சிகள், அறிவு சார்ந்த தகவல்கள், கதைகள், பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் அறிவியல் செய்முறைகள் போன்றவை ஒளிபரப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்விச்சோலை டிவி ஜூன் 3 முதல் முழுநேர ஒளிபரப்பை துவங்குமா?
Reviewed by Rajarajan
on
27.5.19
Rating:
கருத்துகள் இல்லை