Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை வெற்றிகரமாக துவங்கியது...!

kalvitulir



தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை நேற்று முதல் தொடங்கியது. அரசு கேபிள் டிவியில் 200 சேனலில் இந்த கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை ஒளிபரப்பி வருகிறது. ஜூன் முதல் வாரம் முதல் அதிகாரப்பூர்வமான ஒளிபரப்பை துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கற்றலை மேம்படுத்த புதிய யுத்தியாக கல்வி தொலைக்காட்சி தொடங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருந்தது. இதற்கான பணிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் படப்பிடிப்பு கருவிகள், ஒளிப்பதிவு செய்யும் கூடம், அரங்கங்கள்  அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சோதனை ஒளிபரப்பை கல்வி தொலைக்காட்சி துவங்கியுள்ளது. ஜூன் ஆறாம் தேதி முதல் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகள் முழு நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை வெற்றிகரமாக துவங்கியது...! தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி தனது சோதனை ஒளிபரப்பை வெற்றிகரமாக துவங்கியது...! Reviewed by Rajarajan on 31.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை