தேர்வுநிலை , சிறப்பு நிலை அனுமதிப்பதில்காலதாமதம் கூடாது : பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு
ஆசிரியர்களின் சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை ஆணைகளை உண்மைத்தன்மை சான்று காரணம் காட்டி கால தாமதம் செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கூறியுள்ளார். மேலும் தலைமையில் தலைமை செயலகத்தில் 27.5.19 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் கூட்டத்தில் அறிவுறுத்தி உள்ளார்.
பல்வேறு சங்கங்கள் வைத்த கோரிக்கையின் காரணமாக ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை கோரும் கருத்துருக்கள் கல்வி சான்றிதழ் உண்மை தன்மை அறிந்தபின்தான் ஆணை வழங்கப்பட வேண்டும் என்ற அவசியமில்லை அவர்களின் பணி காலத்தை கணக்கிட்டு ஆணை வழங்கினால் போதும் கூறியுள்ளார். மேலும் ஆசிரியைகளுக்கான சிறப்பு நிலை தேர்வு நிலை கருத்துருக்களை 10 நாட்களில் அனுமதித்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் என்று தெரிவித்தார். இதுகுறித்து மிக விரைவில் அரசின் செயல் முறைகள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்வுநிலை , சிறப்பு நிலை அனுமதிப்பதில்காலதாமதம் கூடாது : பள்ளிக் கல்விச் செயலர் உத்தரவு
Reviewed by Rajarajan
on
29.5.19
Rating:

கருத்துகள் இல்லை