TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  இந்நிலையில் தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள குறிப்பில்,  12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம்.இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெற முடிவும்.
அதேப் போல 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வினை எழுத வேண்டும். பட்டப் படிப்புடன், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
முதல் தாள் தேர்வு ஜூன் 8ஆம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு ஜூன் 9ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இரண்டு தேர்வுகளும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
TET தேர்வு நுழைவுச் சீட்டு http://www.trb.tn.nic.in என்னும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள் தங்களது பதிவு எண் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TET ஆசிரியர் தகுதி தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
 
        Reviewed by Rajarajan
        on 
        
27.5.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
27.5.19
 
        Rating: 


கருத்துகள் இல்லை