புதிய பாடத்திட்டத்தில் எல்லாமே தலைகீழ்
தமிழக அரசு கடந்த ஆண்டு முதல் இருந்து ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாட திட்டத்தினை அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் களுக்கும் இந்த ஆண்டு புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்திட்டத்தின்படி பாடப் பகுதிகள் அனைத்தும் க்யூ ஆர் கோடு முறையில் பாடம் நடத்துவதற்கு ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த க்யூ ஆர் கோடு முறையானது கணினி மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளில் இயங்கக்கூடிய ஒரு குறியீட்டு வகை இதனை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் கற்பிக்க முடியும். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது தண்டனைக்குரிய செயலாக பள்ளிக்கல்வித்துறை கருதி நடவடிக்கை எடுத்து வந்து உள்ளது. ஆனால் தற்சமயம் அதற்கு நேர்மாறாக மொபைல் பேசி இல்லாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய சூழ்நிலை வரும் என தெரிய வருகிறது.
ஸ்
தொலைபேசி இல்லாத ஆசிரியர்கள் பாடப்பகுதியில் உள்ள கியூ ஆர் கோட் எனப்படும் குறியீட்டு முறையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். இதனால் மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அனைத்து ஆசிரியர்களும் ஸ்மார்ட் தொலைபேசியை பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
புதிய பாடத்திட்டத்தில் எல்லாமே தலைகீழ்
Reviewed by Rajarajan
on
28.5.19
Rating:
கருத்துகள் இல்லை