அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய 4000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்
அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய 4000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல். அரசு பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதில் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்களை பட்டியலிட்டு அனுப்பும்படி கூறியுள்ளது. பதவி உயர்வு வழங்க ஆசிரியர்களின் கல்வித்தகுதி 11+1+3 அல்லது 10+2+3 இன் படி படித்திருக்கிறார்களா என உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு கல்வித் தகுதி பெறாத ஆசிரியர் பட்டியலில் இடம் பெறக்கூடாது.
பதவி உயர்வு பெறக்கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் முதுகலை ஆசிரியராகப் பணிபுரிந்தால் மீண்டும் ஓர் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி பின்பு தான் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியும் என்ற நிபந்தனையை சேர்க்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட நாலாயிரம் ஆசிரியரின் மீது 70 பி மெமோ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களின் பெயர் பட்டியலில் இடம் பெறக்கூடாது என அறிவுறுத்தி உள்ளது. இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடிய 4000 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் சிக்கல்
Reviewed by Rajarajan
on
30.5.19
Rating:
கருத்துகள் இல்லை