விடைத்தாள் திருத்திய 500 ஆசிரியர்களின் மீது நடவடிக்கை - தமிழக பள்ளிக்கல்வித்துறை
தேர்வுகள் இயக்குனரகம் விடைத்தாள் திருத்திய 500 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் சரிவர மதிப்பீடு செய்யாத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நேற்று முன் தினம் மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு பணி நிறைவு பெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பன்னிரெண்டாம் வகுப்பில் 1500 மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டின் மூலம் விடைத்தாள்களில் மதிப்பெண் அதிகரித்துள்ளது. பல ஆசிரியர்கள் விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யாத காரணத்தினால் மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
இதனை ஆய்வு செய்த கல்வித்துறை சரியாக மதிப்பீடு செய்யாத 500 ஆசிரியர்களுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது
விடைத்தாள் திருத்திய 500 ஆசிரியர்களின் மீது நடவடிக்கை - தமிழக பள்ளிக்கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
28.5.19
Rating:
கருத்துகள் இல்லை