பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த ரயில் பெட்டி போல பள்ளி வகுப்பு
நல்லம்பள்ளி அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, வகுப்பறைக்கு ரயில் பெட்டி போன்று பெயிண்டிங் செய்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ், கடந்த 2005ம் ஆண்டு முதல், உண்டு உறைவிட சிறப்பு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில், இடைநின்ற மாணவ, மாணவிகளை கண்டறிந்து, அவர்களை 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை சேர்த்து கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. சீட்ஸ் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இப்பள்ளியில், தற்போது 50 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தாண்டு, பள்ளி தொடங்குவதற்கு முன்பு, முன்மாதிரி பள்ளியாக்கும் வகையில், பள்ளிக்கு ரயில் பெட்டி வடிவில் வர்ணம் தீட்டுதல் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு படங்கள் வரையப்பட்டுள்ளது. இதையறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி மற்றும் கல்வி அலுவலர்கள், பொதுமக்கள் பள்ளி நிர்வாகி சரவணனை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்த ரயில் பெட்டி போல பள்ளி வகுப்பு
 
        Reviewed by Rajarajan
        on 
        
31.5.19
 
        Rating: 
 
        Reviewed by Rajarajan
        on 
        
31.5.19
 
        Rating: 

கருத்துகள் இல்லை