Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசுப் பள்ளிகளை அரசே அழிக்க முயற்சி செய்கிறது...!


கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நலிந்த பிரிவினரின் பிள்ளைகள் படிப்பதற்கு இந்த சட்டமானது வழிவகை செய்துள்ளது. அதன்படி இன்று தனியார் பள்ளியில் சேர்ப்பதற்காக ஒரு லட்சம் மாணவர்கள் வரை விண்ணப்பித்திருப்பதாக மெட்ரிக் கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.



இதில் மறைந்து இருக்கும் உண்மைச் செய்தி என்னவென்றால் தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு  பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்படி இருக்கையில் ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி படையெடுக்கக் காரணம் என்ன. மக்களுக்கு அரசு பள்ளிகளின் மேல் விழிப்புணர்வு இல்லையா அல்லது அரசே தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கிறதா. இவ்வாறு தனியார் பள்ளிகளில் ஒரு லட்சம் அளவிலான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் போது அரசு பள்ளியில் 3500 காலிபணியிடங்கள் உருவாகிறது. அரசு பணி கிடைக்கும் என்று காத்திருப்பவர்களின் கனவில் அரசே அழிக்க நினைக்கிறது. 



இதனால் குறைந்தபட்சம் ஆயிரம் அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா ஏற்படும்.  அரசின் வருவாயில் குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் அளவிற்கு தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்க்கிறது. இந்த திட்டத்தினால் எதிர்காலத்தில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரிக்க உதவி செய்யுமே தவிர அரசுப்பள்ளிகளை உயர்த்த பயன் தராது. தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு என்னவோ மக்களுக்கு நன்மை தருவது போல தெரியும் ஆனால் உண்மையில் எதிர்காலத்தில் அவர்களுடைய பிள்ளைகளின் அரசுப்பணி வேலைவாய்ப்பில் பாதிப்பு என்னும் உண்மையை அவர்களால் உணர இயலவில்லை என்பதே நிதர்சனம்.
அரசுப் பள்ளிகளை அரசே அழிக்க முயற்சி செய்கிறது...! அரசுப் பள்ளிகளை அரசே அழிக்க முயற்சி செய்கிறது...! Reviewed by Rajarajan on 30.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை