தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
தமிழகத்தில் உரிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் 92 பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்து உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு, ஆய்வகம், போன்ற வசதிகள் இல்லாத இயங்கி வந்தது கண்டறியப்பட்டதால், இந்தக் கல்லூரிகளில் இளநிலை பிரிவின் மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாகக் குறைத்தும், முதுநிலைப்பிரிவின் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதித்தும் அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது
.
.
இதன் காரணமாக இந்த 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் 125 பி.இ., பி.டெக். இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 53 இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதோடு, இந்தக் கல்லூரிகளில் வழங்கப்பட்டு வந்த 122 எம்.இ., எம்.டெக். போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளில்லாத 92 பொறியியல் கல்லூரிகள் மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:
கருத்துகள் இல்லை