B.E/B.TECH இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை குறைப்பு - தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம்
பி.இ., பி.டெக். இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்தவர்களும், B.Sc., கணிதம் முடித்தவர்களும் விண்ணப்பித்து வந்தனர்.
இதற்காக ஒரு கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமோ முடித்த மாணவர்கள் இதில் ஆர்வம் காட்டாததால் பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருந்தன.
இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
அதற்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டால் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நிரப்பப்படாத இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பதற்கான கலந்தாய்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது.
B.E/B.TECH இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை குறைப்பு - தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம்
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:
கருத்துகள் இல்லை