தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வு போக்குவரத்து துறை
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளி வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வானது துவங்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நிறைவடைவதையொட்டி
பள்ளிப் பேருந்துகளில் பாதுகாப்பு வசதிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், அவசரகால வழி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி போன்ற கழிவுகளை ஆய்வு செய்யும் பணி போக்குவரத்து அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பள்ளி வாகன ஆய்வை, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேருந்துகளில் ஆய்வு செய்து குறைபாடுகளின்றி இருந்த பேருந்துகளுக்கு தரச்சான்றிதழையும் வழங்கினார்.
இதேபோல் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பள்ளி வாகனங்களில் தரக்கட்டுப்பாடு குறித்த ஆய்வை தொடங்கி வைத்தார். முன்னதாக ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வு போக்குவரத்து துறை
Reviewed by Rajarajan
on
13.5.19
Rating:
கருத்துகள் இல்லை