தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் எனும் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தற்போது கோடைவிடுமுறைகாலம் என்பதால் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கோடை கொண்டாட் டம் என்ற பெயரில் அரசே இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வழிவகை செய்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தினமும் காலை11 மணிமுதல் பகல் 12-30 மணிவரை இவை நடைபெற்று வருகின்றன.
இதற்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு குளு குளு வசதியுடன் கூடிய அரங்கத்தில் மரத்தடியில் அமர்ந்து இருப்பது போன்ற சூழலில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கல்வி கற்றுத்தருகிறார்கள்.இதில் சிறுவர்கள் விரும்பி படிக்கும் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
தலைமை பண்பு ,பேச்சாற்றல் , எழுத்துப்பயிற்சி , நினைவாற்றல் , ஒழுக்கம் , சுகாதாரம் , சாலைவிதிகள் , நாட்டுப்பற்று ஆகியவற்றுடன் குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டுவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்தப்படுகின்றன.பயிற்சி முடிவில் குழந்தைகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்படுகிறது.இதனால் குழந்தைகள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்பதை காணமுடிகிறது.
இங்கு கற்றுத்தரும் விஷயங்கள் ரசிக்கும்படி உள்ளது, மகிழ்ச்சியாக வந்து கற்கிறோம் என்றும் பிளாஸ்டிக்கின் தீமைகள் பற்றி தெரிந்து கொண்டோம் சாலை விதிகள் , ஹெல்மெட்டின் அவசியம் பற்றியும் சொல்லிக்கொடுத்தனர் என்றும் குழந்தைகள் தெரிவிக்கிறார்கள்.
அரசு நடத்தும் இந்த கோடை பயிற்சி வகுப்புக்கு குழந்தைகளை அழைத்துவரும் பெற்றோர்களையும் அனுமதிப்பதால் அவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
கோடைவிடுமுறையை பயனுள்ளவகையில் குழந்தைகள் மகிழ்ந்து கற்க கல்வித்துறை காட்டும் அக்கறை வரவேற்கத்தக்கது என்று பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டம் எனும் இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:
கருத்துகள் இல்லை