Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம்முழுவதும் போராட்டம்

TET காரணம் காட்டி, 1500 ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம்முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கூட்டணியின் பொதுச் செயலாளர் மயில், நேற்று வெளியிட்ட அறிக்கை:கடந்த 23.8.2010க்கு பிறகு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை கூறி அவர்கள் சம்பளத்தை நிறுத்தி வைக்கக் கூடாது. 8 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றிய பிறகு அவர்களை பணி நீக்கம் செய்யப் போவதாக அச்சுறுத்துவதும் நியாயமற்ற செயல். அரசு அறிவித்தபடி தகுதி தேர்வை நடத்தாமல் போனதும் ஒரு காரணம். இந்த ஆசிரியர்கள் முறையாக ஆசிரியர்பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள். எனவே தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்

.

போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தகுதி பெற்று வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போரை நியமிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஜூன் 7ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டார தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம்முழுவதும் போராட்டம் சம்பளத்தை நிறுத்தினால் தமிழகம்முழுவதும் போராட்டம் Reviewed by Rajarajan on 7.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை