TET தேர்வினால் பி.எட். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு தேதி மாற்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) ஜூன் 8- ஆம் தேதி நடைபெற இருப்பதால், அதே தேதியில் நடைபெற இருந்த பி.எட்., இறுதியாண்டு தேர்வானது ஜூன் 13-ஆம் தேதி பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளது. TRB நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் எட்டாம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது அதே தேதியில் B.Ed., பட்டப் படிப்பிற்காக இறுதியாண்டு தேர்வு நடைபெற இருந்தது. இதனால் இறுதியாண்டு எழுதும் மாணவர்கள் கடும் மன உளைச்சல் அடைந்தனர்.
அந்த மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாத சூழல் உருவானது. இதன் காரணமாக, பி.எட். இறுதியாண்டு தேர்வு தேதியை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்த கோரிக்கையை ஏற்று, ஜூன் 8-ஆம் தேதி நடைபெற இருந்த பி.எட். இறுதியாண்டு தேர்வை, ஜூன் 13-ஆம் தேதிக்கு மாற்றி உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்கள் சிக்கலின்றி டெட் தேர்வை எழுதும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
TET தேர்வினால் பி.எட். பட்டப்படிப்பு இறுதியாண்டு தேர்வு தேதி மாற்றம்
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:


கருத்துகள் இல்லை