தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாற்றி அமைக்க கோரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது,. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு அடுத்தநாளே தேர்வு நடப்பதால் அரசியல் சூழல் கருதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது, “சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு மறுநாளே 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு நடைபெற உள்ளது.
தேர்தல் முடிவு காரணமாக மறுநாள், அரசியல், போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயணம் செய்து தேர்வு எழுத வேண்டும். எனவே அவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது நடத்தப்பட இருந்த தேர்வுகளை கடைசி தேதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – மாற்றி அமைக்க கோரிக்கை!!
Reviewed by Rajarajan
on
4.3.21
Rating:
கருத்துகள் இல்லை