ஆசிரியர்கள் அரசியல் கட்சிகள் தொடர்பான வேளைகளில் ஈடுபட்டால் பணியாளர் விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அரசியல் கட்சிகள் தொடர்பான வேளைகளில் ஈடுபட்டு வகுப்புகளை புறக்கணிக்க செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக திறக்கப்படாமல் தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலர் அரசியல் கட்சிகளில் உறுப்பினராக உள்ளனர். எனவே அவர்கள் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பள்ளி வேலைநாட்களில் கட்சி வேலைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா காரணமாக பள்ளிகள் பல மாதங்களுக்கு பின் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டில் அடிப்படை கல்வி தெரியாமல் பாதித்து விடக்கூடாது என்பதற்காக தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறை கொண்டு பள்ளிக்கு சரியான முறையில் வர வேண்டும். அவ்வாறு வராத ஆசிரியர்கள் மீது பணியாளர் விதிகளின் படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை