தேர்தல் பணியில் இருந்து விலக்கு கோரும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
2021 சட்டமன்ற தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு கோரும் கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அதற்கான ஆவணங்களை தங்களின் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் (CEO) அறிவித்துள்ளார்.
தேர்தல் பணி:
2021ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடக்க இருக்கிறது. பொதுவாக தேர்தலின் போது வாக்கு சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பணிகளிலும் தமிழக அரசின் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும், தேர்தல் ஆணையமும் தொடங்கியுள்ளது.
அரசுப்பணியாளர் பட்டியல்:
தேர்தல் பணியின் முதற்கட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட துறை அலுவலகம் மூலம் பெறப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதங்கள் பெறப்பட்டது. மேலும் பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள், நிறைமாத கர்ப்பிணிகள், நீண்டகால முதுகு வலி, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கபட்டவர்கள் தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை