12/11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் எந்த மாற்றமும் இல்லை பழைய முறையிலேயே தேர்வுகள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் வரும் கல்வியாண்டில் பிளஸ் டூ மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் முறையில் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளதாகவும், அரசின் ஒப்புதலுக்காக கல்வித் துறை பரிந்துரை செய்தது உள்ளதாக தகவல் வெளிவந்தது.
இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது. மேலும் இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ள தகவலில், " பள்ளிக்கல்வித்துறையில் தேர்வுமுறையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை 11/12ம் வகுப்பு பொதுத் தேர்வு 600 மதிப்பெண் முறையில் தேர்வு நடத்தப்படும்.
மொழி பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என்பது போன்ற எந்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மொழி பாடத்தில் இரண்டு தாள்கள் முறையிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு முறையில் எந்த மாற்றமும் கொண்டுவர அரசு பரிசீலனை செய்யவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.' மேலும் தேர்தல் நேரத்தில் தவறான தகவல் பரிமாற்றம் செய்து உள்ளதாக கூறியுள்ளார்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் பள்ளிக்கல்வித்துறையில் தேர்வு முறையில் மாற்றம் இருந்தால் அது கோடை விடுமுறை நிறையும் தருவாயில் மட்டுமே முழுமையாக தெரியவரும் என கூறியுள்ளார்.
மொழி பாடத்தில் ஏதாவது ஒரு பாடத்தில் மட்டும் தேர்வு எழுதினால் போதும் என்பது போன்ற எந்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மொழி பாடத்தில் இரண்டு தாள்கள் முறையிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும், தேர்வு முறையில் எந்த மாற்றமும் கொண்டுவர அரசு பரிசீலனை செய்யவில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.' மேலும் தேர்தல் நேரத்தில் தவறான தகவல் பரிமாற்றம் செய்து உள்ளதாக கூறியுள்ளார்.
ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில் பள்ளிக்கல்வித்துறையில் தேர்வு முறையில் மாற்றம் இருந்தால் அது கோடை விடுமுறை நிறையும் தருவாயில் மட்டுமே முழுமையாக தெரியவரும் என கூறியுள்ளார்.
12/11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் முறையில் எந்த மாற்றமும் இல்லை பழைய முறையிலேயே தேர்வுகள் தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்
Reviewed by Rajarajan
on
11.5.19
Rating:
கருத்துகள் இல்லை