பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 6 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் அதற்கான விண்ணப்பங்களை வரும் திங்கள்கிழமை (மே 6) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி மூலம் அல்லது தேர்வு மையங்கள் மூலமாகவோ ஆன்-லைனில் வரும் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிகக்க வேண்டும். அதற்கான விண்ணப்பப் பதிவு வரும் 6-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சிறப்பு துணைத் தேர்வுகள் ஜூன் 14 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணமாக செலுத்தலாம். தேர்வுக்கான அனுமதிச் சீட்டு இணையதளத்திலேயே வெளியிடப்படும்.
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வுக்கு மே 6 முதல் விண்ணப்பிக்கலாம் - அரசு தேர்வுகள் இயக்ககம்
Reviewed by Rajarajan
on
6.5.19
Rating:
கருத்துகள் இல்லை