தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத “சிறப்பு அனுமதித் திட்டத்தின்” கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு
தனித்தேர்வர்களாக முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால வரையறைக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது “சிறப்பு அனுமதித் திட்டத்தின்” கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
“சிறப்பு அனுமதித் திட்டத்தின்” கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தையும் பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொண்டு தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் சான்றிதழ்களின் நகலினை கண்டிப்பாக இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் 02.05.2019 (வியாழன்) மற்றும் 03.05.2019 (வெள்ளி) ஆகிய இரு நாட்களில் தேர்வரே நேரில் அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வுக்கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000/- கூடுதலாக செலுத்த வேண்டும் என தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் தகவல்கள் காண
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வெழுத “சிறப்பு அனுமதித் திட்டத்தின்” கீழ் விண்ணப்பிக்க வாய்ப்பு
Reviewed by Rajarajan
on
2.5.19
Rating:
கருத்துகள் இல்லை