Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை

 சத்துணவில் தினந்தோறும் முட்டை வழங்கி வருவது போல  மாணவர்களுக்கு பால்

பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது..


சத்துணவில் தினந்தோறும் முட்டை வழங்கி வருவது போல ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பால் தினந்தோறும் வழங்கலாம் என ஆலோசனை செய்து வருவதாக கல்வித்துறை வட்டாரத்தில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சத்துணவில் தினந்தோறும் ஒரு மெனு உடன் கூடிய தரமானமதிய உணவானது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முட்டையுடன் பாலும் வழங்கப்படும் போது மாணவர்களின் ஊட்டச்சத்து முழுமையடையும் என தெரியவருகிறது. இது குறித்து கல்வியாளர்கள் தெரிவிக்கையில் தினந்தோறும் முட்டை வழங்குவது போல அதனுடன் பாலும் வழங்கப்பட்டால் மாணவர்களின் ஊட்டச்சத்து 100 சதவீதம் நிறைவு செய்யப்படும். அவருடைய கற்றல் திறனும் மேம்படும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விரைவில் இந்த திட்டமானது அறிமுகப்படுத்தப்படும் என தெரியவருகிறது.
மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை  மாணவர்களுக்கு சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை Reviewed by Rajarajan on 12.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை