ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் புதிய இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
.
.
தேசிய ஆசிரியர் தகுதி தேர்வில் பொருளதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, தேசிய தகுதி தேர்வு என்பது ஒரு தேர்வு மட்டுமே என்றும் புதிய இட ஒதுக்கீடு சலுகைகள் வழங்க அவசியமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், தகுதி தேர்வு ஒருவரின் தகுதியை சோதிப்பதற்கானதே, இட ஒதுக்கீடு என்பது அடுத்தக்கட்டத்தில் வருவதே என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
Reviewed by Rajarajan
on
13.5.19
Rating:
கருத்துகள் இல்லை