இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு.!
இலவச கல்வி திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேட்டில் ஈடுபடுவதை தவிர்த்திடும் வகையில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழான 25 % மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த திட்டமிட்டுள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட சில பிரிவினருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கை குறித்து அரசு புதிய முடிவை எடுக்க திட்டமிட்டு வருகிறது. கடந்தாண்டுகளில் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கையின் போது அரசு பிரதிநிதி ஒருவர் இருப்பார். அவர் முன்னிலையில் இதற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்பட்டு வந்தது.தற்போது, தனிப்பட்ட முறையில் பள்ளிகள் நடத்தும் குலுக்கல் முறையிலான மாணவர் சேர்க்கையாக அல்லாமல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நடத்தப்படும் மாணவர் சேர்க்கைக்கு ஒட்டுமொத்தமாக ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
Mezire M3 Fitness Wrist Band (Pack Of 1) 78
Mezire M3 Fitness Wrist Band (Pack Of 1) 78
இனி கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் ஏழை மாணவர்கள் குறித்த மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, தற்போது கிடைக்கப்பெற்றிருக்கக்கூடிய விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவர் ஆய்வு செய்வார்.அதற்கு பின்பு யாருயாருக்கெல்லாம் வாய்ப்பு வழங்கலாம் என்பதை அரசே முடிவு செய்து, தேர்வு செய்யப்படும் மாணவர்களின் பட்டியலை ஆன்லைனில் வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.இதற்கான இறுதி முடிவு என்பது நாளை மறுநாள் திங்கள் கிழமை அன்று அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச கல்வி திட்டத்தில் மாணவர் சேர்க்கையை அரசே ஏற்று நடத்த முடிவு.!
Reviewed by Rajarajan
on
19.5.19
Rating:
கருத்துகள் இல்லை